இலங்கை
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களும் வாக்களிக்கும் உரிமை!
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களும் வாக்களிக்கும் உரிமை!
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பொது நிர்வாக அமைச்சகமும் இந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், இலக்கை விரைவாக அடைவதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 40 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கும் தேவையான சட்ட கட்டமைப்பை நிறுவுவதற்கும், தேவையான வசதிகளை வழங்குவதற்காக பொது நிர்வாக அமைச்சினால் ஏற்கனவே ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், வெளிநாட்டில் வசிக்கும் அனைவருக்கும் பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் குறித்த நிகழ்வின் போது வெளிவிவகார, அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.