பொழுதுபோக்கு

வெளியில் இருந்து வந்து சித்து விளையாட்டு… துவண்டு போவாதீர்கள்: மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி பதிவு

Published

on

வெளியில் இருந்து வந்து சித்து விளையாட்டு… துவண்டு போவாதீர்கள்: மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி பதிவு

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், பிரபலங்கள் பலரின் இல்லத் திருமணங்கள் மற்றும் விஷேசங்களுக்கு சமையல் செய்து கொடுத்து வருகிறார். மாதம்பட்டி ரங்கராஜ், சமையல் கலைஞராக மட்டுமல்லாமல் நடிகராகவும் இருந்துள்ளார். ‘மெஹந்தி சர்க்கஸ்’, ‘பென்குயின்’ போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.மாதபட்டி ரங்கராஜுக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் தனது  முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்யாமல் சட்ட விரோதமாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு அனுப்பிய வீடியோவை இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ நொடி பொழுதில் செம வைரலானது. மாதம்பட்டி ரங்கராஜா இப்படி செய்தார் என பேசுப்பொருளானது.இதனிடையே, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாநில மகளிர் ஆணையம் எனப் பல தளங்களில் புகார் அளித்துள்ளார். இவர்களது வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிசில்டாவும் சமூக வலைத் தளங்களில் மாறி மாறி பதிவுகளை வெளியிட்டு போட்டி போட்டு வருகின்றனர்.A post shared by Shruthi Rangaraj (@shruthi_rangaraj)அந்தவகையில், தற்போது மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  “என் மீது பலரும் கரிசணம் காட்டுவதைப் பார்த்தால் நான் மிகவும் கொடுத்து வைத்தவள் என்று நினைக்கத் தோன்றுகிறது. நானும் எனது குழந்தையும் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம் என்று தெரியாமல் பலரும் விமர்சிக்கிறார்கள். ஆனால் என்னுடைய அறிவு முதிர்ச்சி, அனைத்திற்கும் மரியாதையுடன் பதில் அளிக்க கற்றுக் கொடுத்துள்ளது.எல்லா குடும்பத்திற்கும் உள்ளிருந்தும் வெளியிருந்தும் பிரச்சினைகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றை எல்லாம் ஒன்றாக இணைந்தே எதிர்கொண்டு அதிலிருந்து வெளிவர வேண்டும், ஒற்றுமையே பலம். வெளியில் இருந்து யாராவது வந்து சித்து விளையாட்டுகளை விளையாடி, சட்டப்படி மனைவியாக இருக்கும் உங்களை வெளியேற்றும் போது ஒரு போதும் விட்டுத்தராதீர்கள், துவண்டு போவாதீர்கள். உங்கள் கணவருக்காக போராடும் அனைத்து மனைவிகளுக்கும் என் ஆதரவு எப்போதும் உண்டு” என்று தனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஆதரவாக ஸ்ருதி கருத்து தெரிவித்துள்ளார். இந்த பதிவு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version