பொழுதுபோக்கு
50-வயதிலும் சிங்கிள், நடிப்பில் அசத்தும் சீனியர் நடிகைகள்; யார்னு கண்டுபிடிங்க!
50-வயதிலும் சிங்கிள், நடிப்பில் அசத்தும் சீனியர் நடிகைகள்; யார்னு கண்டுபிடிங்க!
சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டால் அவர்களுக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைப்பது அரிதான ஒரு விஷயம். ஆனால் பிளாக் அண்ட் வொயிட் காலக்கட்டத்தில், நடிகைகள் திருமணம் ஆன பின்னரும் நாயகியாக நடித்த வரலாறு இருக்கிறது. ஆனால் இன்றைய தமிழ் சினிமாவில் அதற்கு வாய்ப்பு இல்லை. முன்னணியில் இருந்த நாயகிகள் கூட திருமணத்திற்கு பிறகு முக்கிய கேரக்டர்களில் தான் நடித்து வருகிறார்கள்.அதே சமயம், சினிமாவில் நாயகியாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகைகள் சிலர் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே தங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழந்து வருகிறார். அந்த வரிசையில், 50 வயதை கடந்தும் திருமணம் செய்துகொள்ளாத முக்கிய நடிகைகள் குறித்து பார்ப்போம்.நக்மா90-களில் இந்தி சினிமாவில் அறிமுகமான இவர், 1994-ம் ஆண்டு வெளியான காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, தனது 2-வது படமாக ரஜினிகாந்துடன் பாட்ஷா படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்த இவர், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடா, பேஜ்பூரி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவருக்கு 50 வயது ஆகியுள்ள நிலையில், அவர் இன்னும் திருமணம் செய்யவில்லை. கடைசியாக கடந்த 2008-ம் ஆண்டு தேலா நம்பர் 501 என்ற பேஜ்பூரி படத்தில் நடித்திருந்தார்.தபு1982-ம் ஆண்டு இந்தி படத்தில் அறிமுகமான இவர், 1996-ல் வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், முதல் படமே இவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தாலும், அதன்பிறகு, அஜித்துக்கு ஜோடியாக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்,அர்ஜூனுடன் தாயின் மணிக்கொடி, சினேகிதியே ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள தபு, 53 வயதை கடந்த நிலையில், அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.ஷோபனாகுழந்தை நடச்த்திரமாக அறிமுகமாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த ஷோபான தற்போது முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக தமிழில் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மனைவி கேரக்டரில் போட்டோவாக இருப்பார். தற்போது 54 வயதை கடந்துள்ள ஷோபான இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறார்.சுஷ்மிதா சென்1996-ம் ஆண்டு இந்தியில் வெளியான டிஸ்டாக் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சுஷ்மிதா சென். ஆனால் 1997-ல் தமிழில் வெளியான ரட்சகன் படம் தான் இவரை இந்திய அளவில் பெரிய ஸ்டாராக உயர்த்தியது. இந்த படத்திற்கு பிறகு, முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்த சுஷ்மிதா சென், அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை. பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல இந்தி படங்களில் நடித்துள்ளார். 50 வயதை கடந்துள்ள சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில், 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார்.அமிஷா படேல்இந்தியில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள அமிஷா படேல், தமிழில் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற படத்தில் மட்டும் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள இவர், கடைசியாக, கடந்த ஆண்டு, டவுபா தேரே ஜல்ரா என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது அவருக்கு 50 வயதாகும் இவர் திருமணம் வாழ்க்கையில் இணையாமல் சிக்கிளாகவே இருக்கிறார்.