பொழுதுபோக்கு

கூடைப்பந்து ஆட்டத்தில் கலக்கியவர்… ரூ.300 கோடி அள்ளிய இவர் நடித்த படம்; இந்த நடிகை யார் தெரியுதா?

Published

on

கூடைப்பந்து ஆட்டத்தில் கலக்கியவர்… ரூ.300 கோடி அள்ளிய இவர் நடித்த படம்; இந்த நடிகை யார் தெரியுதா?

திரையுலகில் நடிகர்களாக இருக்கும் பலர் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு நடிகை சாய் பல்லவி, மருத்துவம் படித்துவிட்டு சினிமா துறையில் நுழைந்தார். அதேபோன்று விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டாவும் விளையாட்டு வீராங்கனையாக இருந்த நிலையில் ஒரு சில படங்களில் நடித்தார். இப்படி சினிமாத் துறையில் இருக்கும் பலரும் வேறு துறைகளில் அனுபவம் கொண்டவர்களாக தான் இருக்கிறார்.அந்த வரிசையில் இணையும் பிரபல நடிகை ஒருவர் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த பிரபலம் நடிகை ஆகுவதற்கு  முன்பு  ஒரு மாநில அளவிலான கூடைப்பந்து வீராங்கனையாக இருந்துள்ளார். சிறுவயதிலிருந்தே கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்ட இந்த நட்சத்திரம், மாநில அளவிலான பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆனால், பின்னர் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு திரையுலகில் நுழைந்தார்.முதலில் துணை நடிகை மற்றும் சிறிய வேடங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை நிரூபித்த இவர், பின்னர் கதாநாயகியாக உயர்ந்தார். இப்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல கதாநாயகியாக உள்ளார். அவர் வேறு  யாரும் இல்லை நடிகை அம்ரிதா ஐயர் தான். தமிழில் வெளியான ‘படைவீரன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை அம்ரிதா ஐயர் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தில் அம்ரிதா ஐயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. தொடர்ந்து, ‘காளி’, ‘லிப்ட்’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவந்தார். இவர் தெலுங்கு திரையுலகில் ‘ரெட்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து கடந்த ஆண்டு நடிகை அம்ரிதா ஐயர் நடிப்பில் வெளியான ‘அனுமன்’ திரைப்படம்  ரூ.300 கோடி வசூலித்தது. நடிகை அம்ரிதா ஐயர் தற்போது தெலுங்கில் படு பிசியாக நடித்து வருகிறார். தமிழில் குறைவான படங்களே நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கான முத்திரையை பதிவு செய்துள்ளார் அம்ரிதா.இவர் நடிப்பது மட்டுமல்லாமல், சமூக வலைதளத்திலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டா கிராமில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். நடிகை அம்ரிதா ஐயருக்கு மில்லியன் கணக்கில் ஃபாலோவர்ஸுகள் உள்ளனர். இவர்கள் அம்ரிதாவின் புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version