இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

Published

on

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப் பட்டிகள் அணிவதைக் கட்டாயமாக்குவது தொடர்பாக, மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகரித்துள்ள விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் மற்றும் பாரிய காயங்களைக் குறைக்கும் நோக்குடன்,2455/29 மற்றும் 2025.09.25 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மோட்டார் வாகன சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஆக்கப்பட்டுள்ள 2011 ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க மோட்டார் வாகன  ஒழுங்கு விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

இதனால், அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களிலுள்ள அனைத்து பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பதில்கடமை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version