இலங்கை

அம்பாறை இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத்திட்ட மக்களின் அவல நிலை

Published

on

அம்பாறை இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத்திட்ட மக்களின் அவல நிலை

அம்பாறை கல்முனை இஸ்லாமபாத் சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் மக்கள் தற்போது கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இங்கு கழிவு நீர் தேங்கி நாற்றம் வீசுவதோடு, பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Advertisement

குறிப்பாக மழைக்காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகி, வீதிகள் முழுவதும் நீர் தேங்கி மக்கள் நடமாட்டத்துக்கும் சிரமத்தை உண்டாக்குகின்றது.

குறிப்பாக இப்பிரச்சினை B2 மற்றும் B3 மாடிகளில் மிகுந்த தீவிரமாக காணப்படுகின்றது.

இந்த பிரச்சினை புதியதல்ல — சராசரியாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இங்கு இதுபோன்ற நிலை ஏற்படுவதும், மக்கள் தங்களது சொந்த செலவில் தற்காலிக தீர்வுகளை மேற்கொள்வதுமாக நிலைமை நீடித்து வருகிறது.

Advertisement

இதனால் அடிக்கடி குழப்பங்களும், இடையூறுகளும் மக்களிடையே உருவாகின்றன.

மக்கள் மீண்டும் மீண்டும் இந்த பிரச்சினையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தாலும், இதுவரை எந்த நிரந்தர தீர்வும் எடுக்கப்படாதது வருத்தத்திற்குரியது.

இதன் காரணமாக, இங்கு வாழும் குடும்பங்கள் தங்களது நாள் தவறாத வாழ்வை கூட சிரமத்துடன் எதிர்கொண்டு வருகின்றனர்.

Advertisement

அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, இந்த நீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை கொண்டுவர உரிய‌வ‌ர்க‌ள் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் வேண்டுகோள் விடுக்கிற‌து.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version