இலங்கை

இலங்கையில் கனடா மாணவன் கைது ; தீவிரமாகும் விசாரணை

Published

on

இலங்கையில் கனடா மாணவன் கைது ; தீவிரமாகும் விசாரணை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் 21 வயது கனேடிய பிரஜை எனவும் அவர் கனடாவில் உயர்கல்வி பயிலும் மாணவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

குறித்த சந்தேக நபர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.

குறித்த நபர் கொண்டு வந்த பயணப் பைகளை சோதனை செய்த போது, 18.253 கிலோகிராம் ஹாஷிஷை சுங்க அதிகாரிகளால் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இவை ஆறு பெரிய பொலித்தீன் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 72 சிறிய பொட்டலங்களில் அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

கைது செய்யப்பட்ட கனேடிய நாட்டு பிரஜையும் கைப்பற்றப்பட்ட ஹாஷிஷும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version