இலங்கை

உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் அடையாளம்!

Published

on

உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் அடையாளம்!

2026ஆம் ஆண்டில் உலகில் பார்வையிடக்கூடிய சிறந்த நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. 

உலகளாவிய பயண ஊடக நிறுவனமான லோன்ஸி பிளேனட் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. 

Advertisement

மேலும், இது தனித்துவமான கலாசார பாரம்பரியத்தை கொண்ட இடமாக அமைந்துள்ளமையினால், உலகளாவிய ஈர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

லோன்லி பிளானட்டின் “சிறந்த பயணம் 2026” இன் இத்தாலிய மொழி பதிப்பு கடந்த 22 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தனித்துவமான அங்கீகாரம் இலங்கையின் சர்வதேச ஈர்ப்பை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

சுற்றுலாத் துறையில் சமூக அடிப்படையிலான சுற்றுலா அனுபவங்களை ஊக்குவிக்கவும் ஒரு சக்திவாய்ந்த சந்தைப்படுத்தல் கருவியாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version