இலங்கை
கல்வி மறுசீரமைப்பு விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்து மௌனம்;
கல்வி மறுசீரமைப்பு விடயத்தில் அரசாங்கம் தொடர்ந்து மௌனம்;
இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
கல்வி மறுசீரமைப்புத் தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் கல்விசார்ந்த தரப்பினரால் எழுப்பப்பட்ட முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், அரசாங்கம் மெளனமாகவுள்ளது என்று இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது-
தொழிற்சங்கங்கள் கல்வி மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிக்கல்களை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளன.
அதற்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, தற்போது 9 மாகாணங்களுக்கும் காண்பிக்கப்பட்ட அதே திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. கல்வி மறுசீரமைப்புகள் பல சிக்கல்களை ஏற்படுத்தும். புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளுக்குக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு கூறியிருந்தாலும், அத்தகைய கட்டணம் எதுவும் இதுவரை செலுத்தப்படவில்லை. அதனால் கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் அரசாங்கம் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும்- என்றார்.