இலங்கை
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் படகுச்சேவை தற்காலிக நிறுத்தம்
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் படகுச்சேவை தற்காலிக நிறுத்தம்
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் படகுச்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்துள்ளதை அடுத்தே தற்காலிகமாக படகுச்சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்றும், எதிர்வரும் டிசெம்பர் மாதம் மீண்டும் படகுச்சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை முன்னறிவிப்பால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் எதிர்வரும் 28ஆம் திகதிவரை திட்டமிடப்பட்டிருந்த பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்றும் படகுச்சேவையை நடத்தும் நிறுவனம் அறிவித்துள்ளது.