சினிமா

காது கேட்காதுனு சொன்ன ரசிகர்.. உடனடியாக அஜித் செய்த காரியம்.? தீயாய் பரவும் வீடியோ

Published

on

காது கேட்காதுனு சொன்ன ரசிகர்.. உடனடியாக அஜித் செய்த காரியம்.? தீயாய் பரவும் வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்  சினிமாவில் மட்டுமில்லாமல் கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகின்றார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது.  இதைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்,  தனது 64 ஆவது திரைப்படத்திலும் அஜித் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். தற்போது இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர் அஜித் குமார் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு திடீரென சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் வைரல் ஆகி வருகின்றன. ஆந்திராவில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு  நேற்று மாலையே சென்ற அஜித்குமார், அங்கு தங்கி இருந்து இன்று காலை சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டுள்ளதோடு, ஏழுமலையானை வழிபட்டுள்ளார்.  அதன் பின்பு அங்கு வெளியே வந்த அஜித் குமாரை பார்ப்பதற்கு ரசிகர்கள்  கத்திக்கூச்சல் இட்டுள்ளனர். ஒரு சில ரசிகர்கள் தல.. தல.. என கத்தியதை பார்த்த அஜித்,  உடனடியாக அவர்களிடம் இது கோவில்.. அமைதியாக இருங்க.. என்று சைகையில் காட்டியுள்ளார். இதை அடுத்து ரசிகர்களும் அடங்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இந்த நிலையில்,  வாய் பேச முடியாத, காது கேட்காத  ரசிகர் ஒருவர் செய்கையினால் அஜித்திடம் செல்பி கேட்டுள்ளார். அஜித்தும் உடனே அவரிடம் இருந்து போனை வாங்கி தனது கையால் அவரை பிடித்து செல்பி எடுத்து கொடுத்துள்ளார். இது அந்த ரசிகருக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் படு வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version