இலங்கை
குவைத் விமானசேவை மீண்டும் ஆரம்பம்!
குவைத் விமானசேவை மீண்டும் ஆரம்பம்!
கடந்த 2021 டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த குவைத் விமானசேவை மீண்டும் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதல் பயணத்துக்காக ஏ -320 நியோ வகை விமானமொன்று குவைத்தில் இருந்து நேற்றுத் திங்கட்கிழமை கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு வருகைதந்தது. குவைத் விமானநிலையத்திற்கும் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கும் இடையிலான விமானங்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.