இலங்கை

கெஹெல் பத்ர பத்மேவை எனக்குத் தெரியாது; சி.ஐ.டி விசாரணையின் பின்னர் ஸ்ரீமாலி பொன்சேகா தெரிவிப்பு!

Published

on

கெஹெல் பத்ர பத்மேவை எனக்குத் தெரியாது; சி.ஐ.டி விசாரணையின் பின்னர் ஸ்ரீமாலி பொன்சேகா தெரிவிப்பு!

கெஹெல்பத்ர பத்மேவை எனக்குத் தெரியாது. ஊடகங்களில் பரவிய செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை என்று பிரபல நடிகையும் மொடல் அழகியமான ஸ்ரீமலி பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போது பொலிஸ் காவலில் உள்ள ஒரு குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவுடனான தொடர்பு இருப்பதாக அண்மைக்காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் நடிகை ஸ்ரீமாலி பொன்சேகாவிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

Advertisement

கெஹெல் பத்ர பத்மே மீதான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.

கெஹெல் பத்ர பத்மேயுடன் நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா இருக்கும் புகைப்படம் வெளியானதை தொடர்ந்து விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் பிரபல நடிகையும் மொடல் அழகியமான ஸ்ரீமலி பொன்சேகா கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் வாக்குமூலம் ஒன்றை வழங்க சென்றுள்ளார்.

Advertisement

அதன்பின்னரே ஊடகங்களிடம் இது தொடர்பில் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், கெஹெல் பத்ர பத்மேவுடன் தன்னை தொடர்புபடுத்தி கூறப்படும் கூற்றுக்களை நிராகரிக்கின்றேன்.

கெஹெல் பத்ர பத்மேவை தனக்குத் தெரியாது. ஒரு முறை துபாயில் என் குடும்பத்துடன் ஒரு புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டேன், பலர் எங்களுடன் புகைப்படம் எடுத்தார்கள் – அவர் அவர்களில் இருந்தார்.

Advertisement

சமூகவலைத்தளங்களில் என்ன சொல்லப்படுகிறது என்பது எனக்குத் தெரியும், ஆனால் வதந்திகள் என் பெயரையோ அல்லது நம்பிக்கையையோ கெடுக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை – கடந்த வாரம் இதேபோன்ற மொடல் பியூமி ஹன்சமாலி மீதும் விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

                                                                        

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version