இலங்கை
கொலைக்கலாசாரம் தலைதூக்குகின்றது; சஜித் சுட்டிக்காட்டு
கொலைக்கலாசாரம் தலைதூக்குகின்றது; சஜித் சுட்டிக்காட்டு
நாட்டில் எந்தச் சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமலுள்ளது. இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டங்கள் எவையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களை வாழவைப்பதுதான் ஒரு அரசாங்கத்தின் கொள்கையாக அமைந்திருக்கவேண்டும். ஆனால் இன்று நாட்டில் கொலைக்கலாசாரம் தலைதூக்கியுள்ளது. இவ்வாண்டில் மாத்திரம் அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இன்று சமூகத்தில் கொலைகளும் திட்டமிட்ட குற்றச்செயல்களும் வெகுவாகவும் சர்வ சாதாரணமாகவும் இடம்பெற்றுவருகின்றன. எனவே 220 இலட்சம் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்- என்றார்.