இலங்கை

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மலேசிய கப்பல்!

Published

on

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மலேசிய கப்பல்!

மலேசிய கடலோர காவற்படை கப்பலான ‘KM BENDAHARA’  நேற்று  திங்கட்கிழமை 27ஆம் திகதி  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர்  சம்பிரதாயபூர்மாக வரவேற்றுள்ளனர்.

‘KM BENDAHARA’  என்ற கப்பல் 64.16 மீற்றர் நீளமுள்ளது. இது 50 பேர் கொண்ட அங்கத்துவ குழுவினரை கொண்டுள்ளதுடன் இதன் தரைமை அதிகாரியாக, மொஹமட் ஃபஹிமி பின் உமர் தலைமை தாங்குகிறார்.  இந்த கப்பலின் பணியாளர்கள் நாடு முழுவதும் சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

‘KM BENDAHARA’ தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, எதிர்வரும் 30 ஆம் திகதி நாட்டைவிட்டு வெளியேற திட்டமிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version