இலங்கை
தம்பதியினரைத் கொடூரமாக தாக்கி தலைமறைவான தொழிலதிபர்
தம்பதியினரைத் கொடூரமாக தாக்கி தலைமறைவான தொழிலதிபர்
ஓபத்த வீரபன பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலதிபர் தம்பதியினரின் வீட்டிற்குள் திங்கட்கிழமை (27) நுழைந்த நபர் ஒருவர், கூரிய ஆயுதத்தால் தம்பதியினரைத் தாக்கி, அவர்களைப் பலத்த காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றதாக ஓபத்த பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்ய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தம்பதியினரின் மகனுடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
படுகாயமடைந்த பெண் மாத்தறை பொது மருத்துவமனையிலும், அவரது கணவர் உடுகம அடிப்படை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.