பொழுதுபோக்கு
பாக்ஸ் ஆஃபீசில் ரூ.300 கோடி வசூல்… சாதனை படைத்த ஓ.ஜி: இந்த ஓ.டி.டி-யில் ரிலீஸ்!
பாக்ஸ் ஆஃபீசில் ரூ.300 கோடி வசூல்… சாதனை படைத்த ஓ.ஜி: இந்த ஓ.டி.டி-யில் ரிலீஸ்!
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவரது படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் பவன் கல்யாண், இயக்குனர் சுஜித் இயக்கத்தில் சமீபத்தில் ‘தே கால் ஹிம் ஓஜி’ (They Call Him OG) திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இம்ரான் ஹாஸ்மி, பிரியங்கா மோகன், பிரகாஷ் ராஜ், அர்ஜுன் தாஸ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரத்தம் தெறிக்க அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்ததாக வெளியான இந்த திரைப்படத்தை பவன் கல்யாணின் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சமீப காலத்தில் வெளியான பவன் கல்யாண் படங்களில் அதிக மாஸ் காட்சிகள் நிறைந்ததாக ‘தே கால் ஹிம் ஓஜி’ (They Call Him OG) திரைப்படம் ரசிகர்களை திருப்திபடுத்தியது. இந்த படத்துடைய இயக்குனர் சுஜித் ஏற்கனவே பிரபாஸ் நடித்திருந்த சாஹோ படத்தை இயக்கியிருந்தார். இழந்த அதிகாரத்தை மீட்டெடுக்க முயற்சிக்கும் டானின் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது. ‘தே கால் ஹிம் ஓஜி’ (They Call Him OG) திரைப்படத்தில் நடிகர் பவன் கல்யாணுக்கும், இம்ராஜின் ஹாஸ்மிக்கும் ஒரு அதிரடி சண்டை காட்சி நடைபெறும். இந்த காட்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.’தே கால் ஹிம் ஓஜி’ (They Call Him OG) திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் பாக்ஸ் ஆஃபீசில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. இப்படம் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விசுவல் ட்ரீட்டாக அமைந்தது. ‘தே கால் ஹிம் ஓஜி’ (They Call Him OG) திரைப்படம் அக்டோபர் 23-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.தரவரிசையில் விரைவாக முதலிடத்தை பிடித்த ‘தே கால் ஹிம் ஓஜி’ (They Call Him OG) திரைப்படம் தற்போது உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது. பவன் கல்யாண் படங்களில் அதிக வசூலை குவித்த படமாக ‘தே கால் ஹிம் ஓஜி’ (They Call Him OG) திரைப்படம் மாறியுள்ளது. மேலும், தெலுங்கு சினிமா வரலாற்றில் அதிக வசூலை பெற்ற 7-வது திரைப்படமாக என்ற சாதனையை ‘தே கால் ஹிம் ஓஜி’ (They Call Him OG) படைத்துள்ளதாக கூறப்படுகிறது.