இலங்கை

பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை ; இராணுவத்தினரால் கௌரவிக்கப்பட்ட யாழ் இளைஞன்

Published

on

பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை ; இராணுவத்தினரால் கௌரவிக்கப்பட்ட யாழ் இளைஞன்

தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சுரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை ” பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை” என்ற அவரது சிறப்பு சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி அன்று பிரான்சிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த சுரன், கடுமையான சவால்களுக்கு மத்தியில் ஜேர்மனி, துருக்கி, இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் வழியாகப் பயணம் செய்து அக்டோபர் 23 திகதி அன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

Advertisement

அவரது முயற்சியினை பாராட்டும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டதுடன், மேலும் இலங்கை இராணுவத்தினரால் அவர் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

இந்தப் பயணத்தின் நோக்கம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர்,

யாழ்ப்பாணத்தின் சிறப்பு மரபுகளை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்துவதும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தை ஒரு அழகான இடமாக ஊக்குவிப்பதும், நல்லிணக்கத்தை வளர்ப்பதும், சர்வதேச சமூகங்களுடனான சமூக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதும் தனது நோக்கம் என்று வலியுறுத்தினார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version