இலங்கை
பிழையை மூடிமறைக்கும் அரசின் செயல் கீழ்த்தரம்; நாமல் விளாசல்!
பிழையை மூடிமறைக்கும் அரசின் செயல் கீழ்த்தரம்; நாமல் விளாசல்!
ஒருவர் இறந்த பிறகு, அவரின் கடந்த காலச் செயல்களைப் பற்றிப்பேசி, கொலையை மறைக்கும் வகையில் அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை வேதனைக்குரியது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேசசபைத் தவிசாளர், தனக்குப் பாதுகாப்பு தேவை என்று பொலிஸ்மா அதிபரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தேவையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஒருவர் இறந்த பிறகு, அவரது கடந்த கால செயல்களைப் பற்றிப்பேசி, கொலையை மறைக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுவது கீழ்த்தரச் செயலே. எனவே, மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன் துப்பாக்கிச் சூட்டுக் கலாசாரத்தை உடன் நிறுத்த வேண்டும்- என்றார்.