இலங்கை
போதைப்பொருள் வியாபாரிகள் 23வெளிநாட்டவர் அடையாளம்!
போதைப்பொருள் வியாபாரிகள் 23வெளிநாட்டவர் அடையாளம்!
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் பிரதான வியாபாரிகள் 23 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், பல்வேறு நாடுகளில் தலைமறைவாகி இருந்து குழுக்கள் ஊடாகவே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஆர்ஜென்டினா, ஈரான். இந்தியா போன்ற நாடுகளில் இருந்தும் போதைப்பொருள் கடத்தப்படுகின்றது. வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் கும்பலில் சில இலங்கையர்கள் உள்ளனர்.
அதேவேளை, இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோடியுள்ள பாதாளக்குழு உறுப்பினர்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்குரிய பாதுகாப்பு, இராஜதந்திர நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாதாளக் குழுச் செயற்பாடு மற்றும் போதைப்பொருள் வியாபாரம் என்பவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.