இலங்கை

மட்டக்களப்பு சிவ சக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடந்தேறிய சூரன்போர்

Published

on

மட்டக்களப்பு சிவ சக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடந்தேறிய சூரன்போர்

கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுவதாவளை சிவ சக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் திங்கட்கிழமை (27.10.2025) மாலை சூரன்போர் வெகு சிறப்பாக நடந்தேறியது.

கந்தசஷ்டி விரதத்தின் ஆறாவது நாளான திங்கட்கிழமை ஆலய பிரதான வீதியில் முருகப் பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் பெரும் சமர் நடந்தது.

Advertisement

இதில் சூரபத்மன் தனது தலைகளை வெவ்வேறாக மாற்றிக் கொண்டு முருனிடம் போர் புரிந்தான்.

இறுதியில் ஆலய முன்றலில் வைத்து மாமரத்தில் மறைந்திந்த சூரபத்மனை முருகப் பெருமான் தனது வேலைக் கொண்டு வீழ்த்தியத்தில் சூரபத்மன் சேவலாகவும் கொடியாகவும் மாற்றம் பெற்றார்.

இக்காட்சி ஆலயத்தில் பக்தர்களின் மெய்சிலிக்க வைக்கும் வகையில் நடைபெற்றது. ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கு.சபாநாயகக் குருக்கள் தலைமையில் நடைபெற்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version