இலங்கை
மாகாணத் தேர்தலுக்கு ஏராளமான தடைகள்; பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவிப்பு!
மாகாணத் தேர்தலுக்கு ஏராளமான தடைகள்; பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவிப்பு!
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் ஏராளமான தடை காணப்படுகின்றன. அந்தத் தடைகள் அனைத்தும் நீக்கப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் அக்கறையுடன் உள்ளது. ஆனால், அதற்கு முன்னர் பல விடயங்களுக்குத் தீர்வுகாண வேண்டிய தேவையுள்ளது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகண்ட பின்னரே தேர்தலை நடத்த முடியும். எனவே, அது தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதை முன்னிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். மக்களால் நிராகரிக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் தோற்கடிக்கக்கூடிய வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பொய்ப்பரப்புரைகளை இனியும் நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. எனவே, அவர்கள் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்படுவது உறுதி – என்றார்.