சினிமா
மெகா ஸ்டாரையும் புரட்டியெடுத்த டீப் பேக் வீடியோ.! சிரஞ்சீவிக்கு சார்பான நீதிமன்றம்..
மெகா ஸ்டாரையும் புரட்டியெடுத்த டீப் பேக் வீடியோ.! சிரஞ்சீவிக்கு சார்பான நீதிமன்றம்..
தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகரும், தெலுங்கு சினிமாவின் “மேகா ஸ்டார்” என போற்றப்படும் சிரஞ்சீவி, தற்போது டீப் பேக் (Deepfake) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் காரணமாக பெரும் அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் உள்ளார்.அவரது புகைப்படங்களை ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் மாற்றி, அவரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அவதூறு வீடியோக்கள் மற்றும் படங்கள் இணையத்தில், பரவியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து, சிரஞ்சீவி நேரடியாக ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.சிரஞ்சீவி அளித்த புகாரில்,“எனது அனுமதியின்றி, எனது முகம் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி டீப் பேக் வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க திட்டமிட்ட முயற்சி. இதை உடனடியாக விசாரித்து குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில், ஐதராபாத் சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய தளங்களின் முகவரிகளைப் பற்றிய விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.இதற்கு முன்பே சிரஞ்சீவி ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் அவர், “எனது பெயர், புகைப்படம் அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது.” என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கில், நீதிமன்றம் சிரஞ்சீவியின் தரப்பில் இடைக்காலத் தடை உத்தரவையும் வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.