பொழுதுபோக்கு
மோசமான வார்த்தை… ஆல் இந்தியா ரேடியோவில் தடை செய்யப்பட்ட இளையராஜா பாடல்: கங்கை அமரன் ஓபன் டாக்!
மோசமான வார்த்தை… ஆல் இந்தியா ரேடியோவில் தடை செய்யப்பட்ட இளையராஜா பாடல்: கங்கை அமரன் ஓபன் டாக்!
அன்றைய காலக்கட்டத்தில், ஆல் இந்தியா ரேடியோவில் தான் சினிமா பாடல்கள் கேட்டு ரசிக்க முடியும். இதில் அதிகமுறை கேட்கப்பட்ட பல பல பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. அதே சமயம், ஆல் இந்தியா ரேடியோவில் தடை செய்யப்பட்ட பாடல்களும் இருக்கிறது. அந்த வகையில் இளையராஜா பாடல் தடை செய்யப்பட்டது குறித்து கங்கை அமரன் கூறியுள்ளார்.சினிமாவை பொறுத்தவரை இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். சினிமா உருவாவதற்கு முன்பாக இருந்த நாடகங்களிலும் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு படம் வெளியாகும் முன்பே அந்த படத்தில் பாடல்கள் ரிலீஸ் செய்யப்பட்டுவிடும். கடந்த காலங்களில் பாடல்கள் வெளியீட்டின்போது கேசட்கள், மூலம் வெளியிடப்படும். ஆனால் இப்போது பலரும் ஆன்லைனில் பார்த்துவிடுகிறார்கள். இதனால் பாடல் குறித்து ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை உடனடியாக தெரிவிக்கிறார்கள்.அதே சமயம் 70,80 மற்றும் 90 காலக்கடங்களில் சமூகவலைதளங்களின் பயன்பாடு இல்லை. இதனால் ஒரு படத்தின் பாடல்கள் வெளியாகிறது என்றால், அது ஆல் இந்தியா ரேடியோ, இலங்கை வாணொலி, உள்ளிட்ட ரேடியோ தளங்களில் மூலம் தான் கேட்க முடியும். இப்போது யூடியூப்களில் பல மில்லியன் வியூஸ்கள் போயிருக்கும் பாடல்களை பட்டியலிடுவது போல், அந்த காலக்கட்டத்தில், இலங்கை வாணொலியில் அதிக முறை ஒளிபரப்பு செய்யப்பட்ட பாடல்களை பட்டியலிடுவார்கள்.அந்த அளவிற்கு வாணொலியில் வெளியாகும் பாடல்களை கேட்க, ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி இருக்கிறார்கள். இப்படி சினிமா பாடல்களுக்கு முக்கிய தளமாக இருந்த ஆல் இந்தியா ரேடியோவில், இளையராஜாவின் முக்கிய பாடல் ஒன்று தடை செய்யப்பட்டுள்ளது. 1979-ம் ஆண்டு வெளியான படம் தான் பொண்ணு ஊருக்கு புதுச சுதாகர், விஜயன், சரிதா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படத்தை ஆர்.செல்வராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கங்கை அமரன் எழுதிய ஓரம் போ, ஓரம் போ ருக்குமணி வண்டி வருது பாடலை, இளையராஜா, சுதாகர் இருவரும் இணைந்து பாடியிருந்தனர். ஆனால் இந்த பாடல் மோசகமாக இருக்கிறது என்பதால் ஆல் இந்தியா ரேடியோவில் தடை செய்யப்பட்டதாக செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆல் இந்தியா ரேடியோவிடம் கேட்ட கங்கை அமரன், இந்த பாடலை எதற்காக தடை செய்தீர்கள்? அதற்கான காரணத்தை சொன்னால், அதற்கு தகுந்தபடி நாங்கள் பாடல் எழுதுவோம். எங்கள் உழைப்பு இப்படி தடை செயய்ப்பட கூடாது என்று கேட்டுள்ளார். A post shared by மாண்புமிகு மக்கள் (@tamilpeople_offl)இதை கேட்ட அவர்கள், இந்த பாடலை மாற்றி பாட (ஆபாசமாக)வாய்ப்பு இருக்கும் அளவுக்கு வார்த்தைகள் இருக்கிறது. அதனால் தான் தடை செய்தோம் என்று சொல்ல, கோபமான கங்கை அமரன், மற்றொரு பாடலை பாடி, இந்த பாடலை ஏன் நீங்கள் தடை செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அதற்கு அதிகாரிகள் எந்த பதிலும் சொல்லவில்லை என்று கங்கை அமரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.