இந்தியா
‘மோந்தா’ புயல் எதிரொலி: புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் 3 நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; பாதுகாப்பு நடவடிக்கை துரிதம்
‘மோந்தா’ புயல் எதிரொலி: புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் 3 நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; பாதுகாப்பு நடவடிக்கை துரிதம்
புதுச்சேரி, ஏனாம் பிராந்தியத்தில் ‘மோந்தா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வருகை தந்துள்ளனர்.’மோந்தா’ புயல் வலுப் பெற்று இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அல்லது இரவு ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கக்கூடும் என தெரிகிறது. இதையொட்டி புதுவை பிராந்திய பகுதியான ஏனாமில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் மண்டல நிர்வாகி அங்கீத்குமார், சிறப்பு அதிகாரி அமன் சர்மா, போலீஸ் சூப்பிரண்டுவரதராஜன் ஆகியோர் தலைமையில் ஏனாமில் நேற்று நடந்தது. தேசிய பேரிடர் மீட்புக்குழு புதுச்சேரியில் இருந்து ஐ.ஆர்.பி.என்., ஊர்க்காவல்படை வீரர்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், தாழ்வான பகுதிகளில் வசிக் கும் பொதுமக்களை 18 அரசு பள்ளிகள் அமைக்கப்பட் டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும் ஆற்றில் இருந்து வெள்ள நீர் கரையோர பகுதிகளுக்கு புகுவதை தடுக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஏனாமிற்கு விசாகப்பட்டினத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தந்துள்ளனர். இதற்கிடையே முதல்- அமைச்சர் ரங்கசாமி ஏனாம் புயல் பாதிப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், மண்டல நிர்வாகி அங்கீத் குமார் மற்றும் அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.அதேபோல் புதுவையிலும் கனமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.பாபு ராஜேந்திரன் புதுச்சேரி