பொழுதுபோக்கு
ரஜினியின் தோல்வி படத்தில் நடித்த சிறுமி; சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தவர்: இவர் யார் தெரியுமா?
ரஜினியின் தோல்வி படத்தில் நடித்த சிறுமி; சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தவர்: இவர் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்த குழந்தை நட்சத்திரங்கள் தற்போது வளர்ந்து பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். இப்போது அவர்களை பார்த்தால், அதில் நடித்த சிறுமியா இவர் என்ற ஆச்சரியம் இருக்கும். அந்த வரிசையில், ரஜினிகாந்துடன் நடித்த சிறுமி ஒருவர் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். அவர் யார் தெரியுமா?தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் தான் ரஜினிகாந்த். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் இவருக்கும் தோல்வி படங்கள் அவ்வப்போது வருவது உண்டு. அந்த வகையில் சந்திரமுகி என்ற பெரிய வெற்றிப்படத்திற்கு பிறகு, இயக்குனர் பி.வாசு – ரஜினிகாந்த் கூட்டணி இணைந்த படம் தான் குசேலன். மலையாளத்தில் ஸ்ரீனிவாசன் கதை எழுதி நடித்து தயாரித்த கதை பரையும்போல் என்ற படத்தின் ரீமேக். மலையாளத்தில் மம்முட்டி சினிமாவின் முன்னணி நடிகர் கேரக்டரில் நடித்திருப்பார். அதேபோல் தமிழில் வெளியான குசேலன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அந்த கேரக்டரில் நடித்திருப்பார். ஸ்ரீனிவாசன் நடித்த கேரக்டரில் தமிழில் பசுபதி நடித்திருப்பார். அவரின் மனைவியாக மலையாளம், தமிழ் என இரு மொழிகளிலும் மீனா நடித்திருந்த நிலையில், பசுபதியின் பிள்ளைகளாக மலையாளத்தில் நடித்த ஷாப்னா, ரேவதி சிவக்குமார் ஆகிய இருவரும் நடித்திருப்பார்கள். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரஜனிக்கு தோல்வியாக அமைந்தது. மேலும், படத்தின் உண்மையான ஹீரோ பசுபதி தான். கதை அவரை சுற்றி தான் நடக்கிறது. ரஜினிகாந்த் அவரின் நண்பராக வருகிறார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ரஜினிகாந்த் இந்த படத்தின் மூழுநீள கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் என்று பேசப்பட்டதே படத்தின் தோல்விக்கு காரணமாக சொல்லப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் – பி.வாசு இணைந்து படம் பண்ணவே இல்லை. இந்த படத்தில் பசுபதியில் 2-வது மகள் கேரக்டரில் நடித்தவர் தான் ரேவதி சிவக்குமார். மலையாளத்திலும் அவரே நடித்திருந்த நிலையில், அவரின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த சிறுமியா இவர் என்று ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.