இலங்கை

வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் ; வீட்டிலிருந்த தாய்க்கு நடந்த அசம்பாவிதம்

Published

on

வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் ; வீட்டிலிருந்த தாய்க்கு நடந்த அசம்பாவிதம்

திஸ்ஸமஹாராம பகுதியில் வீடொன்றை உடைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ11 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் மற்றும் உடமைகள் திருடப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (27) திஸ்ஸமஹாராம, ரப்பர்வத்தையைச் சேர்ந்த 88 வயதுடைய மூதாட்டி ஒருவரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

முறைப்பாடளித்த மூதாட்டி  தெரிவித்ததாவது

“தனது இரண்டு மகள்கள் துபாய் நாட்டிலும், ஒரு மகன் கனடாவிலும் வசிப்பதாகவும், அவர்கள் அவ்வப்போது தனக்கு அன்பளிப்பாக வழங்கிய, 11 கோடியே 49 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் (114,922,000) பெறுமதியான தங்க ஆபரணங்களை வீட்டில் உள்ள சில அலுமாரிகளில் துணிகளுக்கு அடியில் மறைத்து வைத்திருந்ததாகவும், திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் 300 பவுன்ஸுக்கும்  அண்மித்தவை” என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், சமையலறைக்கு அருகிலிருந்த 3,250 கிலோ கிராம் (3250kg) நிறையுடைய 50 மூடை நெல், வீட்டிலிருந்த பல மின் உபகரணங்கள், ஒரு சலவை இயந்திரம் ஆகியனவும் திருடப்பட்டுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version