பொழுதுபோக்கு
ஃபார்முலா 1 வீரர் நரேன் கார்த்திகேயனுடன் சந்திப்பு; கோ கார்ட்டிங் வாகனத்தை அஜித் குமார்: வீடியோ!
ஃபார்முலா 1 வீரர் நரேன் கார்த்திகேயனுடன் சந்திப்பு; கோ கார்ட்டிங் வாகனத்தை அஜித் குமார்: வீடியோ!
சமீபத்தில் நடந்த கார் பந்தயத்தில் தனது அணியுடன் பங்கேற்ற நடிகர் அஜித்குமார் 3-வது இடம் பிடித்து அசத்திய நிலையில், தற்போது கோவையில் பிரபல கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயனை சந்தித்து உரையாடியுள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் அஜித். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள இவர், நடிப்பு மட்டும் இல்லாமல், துப்பாக்கிச்சூடு, கார் மற்றும் பைக் ரேஸ், உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளிலும் தன்னை நிரூபித்து வருகிறார். சினிமாவை கடந்து விளையாட்டு போட்டிகளிலும் அசத்தி வரும் அஜித், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்து சாதித்த நிலையில், இந்த ஆண்டு மலேசியா, அடுத்த ஆண்டு (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் தனது ரேசிங் அணியுடன் கலந்துகொள்ள இருக்கிறார். கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம், அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் வெளியாகாத நிலையில், அவர் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.இன்னும் ஓரிரு தினங்களில் அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அஜித் சமீபத்தில் தனது குடும்பத்துடன் பல கோவில்களில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இதனிடையே தற்போது அஜித் கோவையில் கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனை சந்தித்துள்ளார். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள 111 ஏக்கர் பரப்பளவு, 3.8 கி.மீ நீள ரேஸிங் டிராக்கில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.ஃபார்முலா 1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனுடன் கலந்துரையாடிய அஜித்குமார்#AjithKumarRacing | #Tamilcinemapic.twitter.com/yHsfIJop0Jஅங்கு கோ கார்ட்டிங் வாகனத்தை அஜித் இயக்கிப் பார்த்தார். இருவரும் ரேஸிங் தொழில்நுட்பம் குறித்து உரையாடினர். இந்த சந்திப்பு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்திய மோட்டார் விளையாட்டை வளர்த்தெடுக்கவும் புதிய பந்தயத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.