பொழுதுபோக்கு
அம்மா, மகள், பேத்தி… தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வந்த 3 தலைமுறை நடிகைகள்: பேத்தி ரொம்ப ஃபேமஸ்!
அம்மா, மகள், பேத்தி… தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வந்த 3 தலைமுறை நடிகைகள்: பேத்தி ரொம்ப ஃபேமஸ்!
சினிமாவை பொறுத்தவரை ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் நடிக்க வந்துவிட்டால், அவரை தொடர்ந்து அவரது வீ்ட்டில் இருந்து பல நடிகர் நடிகைகள் உருவாகிவிடுவார்கள். இப்படி வாரிசு நடிகரைாக வந்தாலும் அவர்களுக்கு திறமை இருந்தால் மட்டுமே நீடிக்க முடியும். அந்த வகையில் தமிழ் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில், அம்மா, மகள், பேத்தி என 3 தலைமுறை நடிகைகள் கோலாச்சியுள்ளனர். அவர்கள் யார் தெரியுமா?தியாகராஜ பாகவதர் நடிப்பில் கடந்த 1937-ம் ஆண்டு வெளியான ‘சிந்தாமணி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை குமாரி ருக்மணி. சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர், 1945-ல் வெளியான ‘ஸ்ரீவல்லி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் நாயகனாக நடித்திருந்தார். அதன்பிறகு, சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில், மணிவண்ணனின் தாய் கேரக்டரில் நடித்திருந்த குமாரி ருக்மணி 2007-ம் ஆண்டு மரணமடைந்தார். இவரது மகள் லட்சுமி. 1968-ம் ஆண்டு ஜீவனாம்சம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், எம்.ஜி.ஆருடன் மாட்டுக்கார வேலன், படத்தில் நடித்துள்ளார். மேலும் சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள லட்சுமி,தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 650 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். 1977-ம் ஆண்டு வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்துக்காக தேசிய விருதை பெற்றவர் லட்சுமி. 1978-ம் ஆண்டு வெளியான ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார். இவரது மகள் தான் ஐஸ்வர்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி படங்களில் நடித்து வரும் இவர், 1991-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான ‘மில் தொழில்’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.அதன்பிறகு பாக்யராஜூவுடன் ‘ராசுக்குட்டி, ரஜினியுடன் எஜமான்’, கமலின் பஞ்ச தந்திரம்’, ‘த்ரிஷாவுடன் அபியும் சூர்யாவின் ஆறு என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். பொல்லாதவன் உள்ளிட்ட சில படங்களில் லட்சுமியுடன் இணைந்து நடித்துள்ள ரஜினிகாந்த், எஜமான் படத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.