இலங்கை

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெறும் மக்களுக்கு வெளியான அறிவிப்பு!

Published

on

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெறும் மக்களுக்கு வெளியான அறிவிப்பு!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்றும், இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகள் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது. 

குறித்த பயனாளிகளின் பெயர் பட்டியல் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

இவ்வாறு ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, இதுவரை வங்கிக் கணக்கு திறக்காத பயனாளிகள், தமது பிரதேச செயலகத்திற்குச் சென்று வங்கிக் கணக்குகளைத் திறப்பது தொடர்பான கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் கடிதத்தை மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி அல்லது பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றில் தமக்கு வசதியான வங்கிக் கிளையொன்றில் சமர்ப்பித்து, ‘அஸ்வெசும’ பயனாளி வங்கிக் கணக்கொன்றை திறக்க வேண்டும் எனவும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத, ‘அஸ்வெசும’ இரண்டாம் கட்டத்திற்கு தகுதிபெற்ற பயனாளிகள், விரைவில் இந்த வங்கிக் கணக்குகளைத் திறந்து, குறித்த வங்கிக் கணக்கு விபரங்களை பிரதேச செயலகங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version