இலங்கை

இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே புதிய கப்பல் பாதை!

Published

on

இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே புதிய கப்பல் பாதை!

இந்தியாவும் இலங்கையும் அதாவது  இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளன.

மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் போது, இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.  இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால், இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுரா கருணாதிலகவுடன் இது தொடர்பில் இருதரப்பு சந்திப்பை நடத்தியுள்ளார்.

Advertisement

இந்த புதிய கப்பல் பாதையைத் தொடங்குவதன் மூலம் இந்தியா-இலங்கை கடல்சார் இணைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் விவாதித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version