இலங்கை
இலங்கை மத்திய வங்கிக்கு புதிய பிரதி ஆளுநர்கள் நியமனம்!
இலங்கை மத்திய வங்கிக்கு புதிய பிரதி ஆளுநர்கள் நியமனம்!
2023ஆம் ஆண்டு 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் விதிமுறைகளுக்கமைய, இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவால் இவர்கள் இருவரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, உதவி ஆளுநர் சி. அமரசேகர, மற்றும் உதவி ஆளுநர் கே. ஜி. பி. சிறிகுமார ஆகியோர் முறையே எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.