பொழுதுபோக்கு
இவ்ளோ திட்டுறேன், சிரிக்கிறயே; நேரடியாக கேட்ட கண்ணதாசன், எம்.ஜி.ஆர் கொடுத்த மாஸ் பதில்!
இவ்ளோ திட்டுறேன், சிரிக்கிறயே; நேரடியாக கேட்ட கண்ணதாசன், எம்.ஜி.ஆர் கொடுத்த மாஸ் பதில்!
தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை மக்கள் மத்தியில் தனக்கான இடத்தைப் பிடித்தவர் எம்.ஜி.ஆர். இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர். தொடர்ந்து 3 முறை முதல்வர் இருக்கையில் அமர்ந்த இவர், இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என பன்முக திறமையுடன் வலம் வந்தார். அன்று முதல் இன்று வரை நல்ல மனிதருக்கு இலக்கணமாக எம்.ஜி.ஆர் அமைந்துள்ளார்.சிறுவயதில் ஒரு நாடக நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதன்பிறகு, சதிலீலாவதி என்ற படத்தில் காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் சிறிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்த இவர், 10 வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக உருவெடுத்தார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லை.அதே சமயம் மனம் தளராத எம்.ஜி.ஆர் ‘நாடோடி மன்னன்’ என்ற படத்தை இயக்கி தயாரித்து, நடித்து வெற்றி கண்டார். அதன்பிறகு பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்தார். இன்று வரையிலும் பலரும் எம்.ஜி.ஆரை போன்று உதவி செய்து பழகுங்கள் என்று சொல்லி வருகின்றனர். இந்நிலையில், கண்ணதாசன் தன்னை குறித்து பேசியது தொடர்பாக எம்.ஜி.ஆர் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, “ஒரு முறை கவிஞர் கண்ணதாசன் என்னை சந்தித்தார். அப்போது அவர் என்னை பார்த்துக் கேட்டார். நான் உன்னை இவ்வளவு திட்டியிருக்கிறேன். ஆனால், நீ என்னை பார்க்கும் போதெல்லாம் எதுவும் பேசவும் செய்யவில்லை, திட்டவும் இல்லை, வெளியிலும் என்னை பற்றி எதுவும் பேசவில்லை, சிரிக்கிறாய் என்று கேட்டார். நீங்கள் திட்டுவதை எல்லாம் நான் மதித்தால் தானே உங்கள் மீது கோபம் வரப்போகிறது என்று சொன்னேன்” என்றார்.தமிழ் சினிமாவில், வாழ்க்கைக்கு தேவையான தத்துவங்களை தனது பாடல் வரிகள் மூலம் சொல்லிக்கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் தான் கவியரசர் கண்ணதாசன். எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ரஜினிகாந்த் கமல்ஹாசன் என பலருக்கும் தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்துள்ள கண்ணதாசன் பெரும்பாலான பாடல்களை தனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை வைத்து எழுதியுள்ளார். கண்ணதாசன் எழுதிய பாடல்கள் இன்று கேட்டாலும் மனதிற்கு அமைதியை தரும் பாடலாக அமைந்துள்ளது.