இலங்கை

எதிர்க்கட்சி போராட்டத்தில் ஐ.ம.சக்தி பங்கேற்கவும்; பெரமுன அழைப்பு!

Published

on

எதிர்க்கட்சி போராட்டத்தில் ஐ.ம.சக்தி பங்கேற்கவும்; பெரமுன அழைப்பு!

நுகேகொடையில் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்புக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானகவக்கும்புர மேற்படி அழைப்பை விடுத்தார். இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் 21 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியும் பங்கேற்கவேண்டும். இது தனிநபர்களைப் பிரசாரப்படுத்தும் கூட்டம் அல்ல. எனவே, இதில் பங்கேற்பதால் கட்சிகளின் தனித்துவத்துக்குப் பாதிப்பு ஏற்படாது என்றும்  அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version