சினிமா
என் மகன் சொன்ன ஒரு வார்த்தையால் தான் மாறினேன்… ராமரின் மனதை நெகிழவைக்கும் கருத்து.!
என் மகன் சொன்ன ஒரு வார்த்தையால் தான் மாறினேன்… ராமரின் மனதை நெகிழவைக்கும் கருத்து.!
விஜய் டிவி வழியாக பிரபலமான நகைச்சுவை நடிகர் ராமர், தனது சமீபத்திய கருத்தால் இணையத்தை உலுக்கியுள்ளார். தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தையும், குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்திய அவரது உரை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.தனது சமீபத்திய பேட்டியில் ராமர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களை ஆழமாகத் தொட்டுள்ளன. அவர் கூறியதாவது, “நிறைய பேர் தனது மனைவி, பிள்ளைகளை எல்லாம் மறந்துட்டு தனது சந்தோஷத்துக்காக குடிக்கிறாங்க. நானும் அப்படி இருந்தவன் தான். ஆனா, என் பையன் என்னை கட்டிப்பிடிச்சு குடிக்காதீங்க அப்பான்னு சொன்னான். அன்றிலிருந்து நான் குடிக்கிறதையே விட்டுட்டேன். தயவு செய்து உங்க குழந்தைகளின் எதிர்காலத்துக்காவது குடிய நிறுத்துங்க…”. என்றார். ராமர் விஜய் டிவியின் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சி மூலம் நகைச்சுவை உலகில் தன்னை வெளிப்படுத்தியவர். தனது இயல்பான காமெடி டைமிங், உண்மையான நடிப்பு என்பவற்றால் அவர் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நகைச்சுவை ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவரின் சிரித்த முகம் அனைத்து ரசிகர்களிடையேயும் மிகவும் பிரபலமானது. அத்தகைய கலைஞரின் கருத்து தற்பொழுது வைரலாகி வருகின்றது.