இலங்கை

கொழும்பு – நாரஹேன்பிட்டி தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து; மூவர் மருத்துவமனையில்… மீட்பு பணிகள் தீவிரம்

Published

on

கொழும்பு – நாரஹேன்பிட்டி தொடர்மாடி குடியிருப்பில் தீ விபத்து; மூவர் மருத்துவமனையில்… மீட்பு பணிகள் தீவிரம்

 கொழும்பு – நாரஹேன்பிட்டி, தபரே மாவத்தையில் இன்று (29) தொடர்மாடி குடியிருப்பு வளாகத்தின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Advertisement

நிலைமையைக் கட்டுப்படுத்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இரண்டாம் இணைப்பு

  நாரஹேன்பிட, தாபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்துவதற்காக, தற்போது 13 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகின்றது.

Advertisement

குறித்த குடியிருப்புத் தொகுதியின் நான்காவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், மேல் மாடிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள்  மும்மரமாக இடம்பெறுவதாக  கூறப்படுகின்றது.

அதோடு  கட்டிடத்தில்  மக்களை மீட்பதற்காக ‘ஸ்கைலிஃப்ட்’ (Skylift) வாகனங்கள் இரண்டும் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

  தீ விபத்து காரணமாக வெளியேறும் வாயில்கள் தடைப்பட்டுள்ளதாகவும்  அதன் காரணமாக , இந்த ‘ஸ்கைலிஃப்ட்’ வாகனங்களைப் பயன்படுத்தி சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

இதேவேளை, தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்தத் தீ விபத்தினால் ஒரு வீடு முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.

அத்துடன், அந்த வீட்டில் சிக்கியிருந்த இரண்டு பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version