இலங்கை

தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு வாழ்த்துத் தெரிவித்த ஞானசார தேரர்!

Published

on

தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு வாழ்த்துத் தெரிவித்த ஞானசார தேரர்!

தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனையான பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு மாநாயக்க தேரர்கள் சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

 மேலும் அவர் தெரிவிக்கையில், இவர் இலங்கைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.சர்வதேச மட்டத்தில் மென்மேலும் வெற்றிப் பெறுவதற்கு அவரை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்விடயத்தின் இனத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட கூடாது.

Advertisement

 வீராங்களை பாத்திமா ஷபியா யாமிக் பற்றி சமூக ஊடகங்களில் பலர் மாறுப்பட்ட பல விடயங்களை பதிவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. அனைத்து விடயங்களிலும் மதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட முடியாது.

 கொழும்பில் உள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 இதேவேளை ஏற்கனவே முஸ்லீம் மக்கள் தொடர்பில் சர்ச்சசைக் கருத்துக்களை தெரிவித்து ஞானசார தேரர் சிறை சென்று வந்திருந்தார்.  இதேவேளை   இதே ஞானசார தேரர் முஸ்லீம் பெண்களின் ஆடைகள் தொடர்பில் விமர்சனம் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில்   இவர் வீராங்கனையான பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார்.

Advertisement

 உண்மையில் அது பாராட்டத்தக்க ஒரு விடையம். அந்தவகையில் லங்கா4 ஊடகம் சார்பாக அவருக்கு பராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version