சினிமா

தனித்தனியாக காலில் விழுந்து அழுதாரா விஜய்.? உண்மையில் நடந்தது என்ன? அந்தணன் பகிர்

Published

on

தனித்தனியாக காலில் விழுந்து அழுதாரா விஜய்.? உண்மையில் நடந்தது என்ன? அந்தணன் பகிர்

கரூரில்  நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய்  மேற்கொண்ட பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  அவர்களுடைய குடும்பங்களுக்கு  நஷ்ட ஈடாக தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.   இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்திற்கு பின்பு  பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை விஜய் நேற்று முன்தினம் சந்தித்தார். இந்த நிலையில், இந்தச் சம்பவம் பற்றி வலைப்பேச்சு அந்தணன் தனது YouTube சேனலில் தெரிவித்த கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் அவர் கூறுகையில், ‘கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் யாராலும் மறக்க முடியாதது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை விஜய் நேரில் சென்று சந்தித்தார், இது அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்’ என்பது அனைவரின் எண்ணமாக இருந்தது. ஆனால், விஜய் கரூர் சென்று ஆறுதல் கூறவில்லை, பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து ஆறுதல் கூறினார் என சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வந்துள்ளன. ஆனாலும், அதன் மையப் புள்ளி விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்பதே.சென்னை மாமல்லபுரத்தில் நடந்த இந்த சந்திப்பு மிகவும் நெகிழ்வாக இருந்ததாக பலர் கூறுகின்றனர். இது கரூர் சம்பவத்தை மீண்டும் நினைவுகூறும் நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த நிகழ்விற்கு எந்த ஒரு ஊடகத்தையும் விஜய் அனுமதிக்கவில்லை. அந்த நிகழ்வில் புஸ்லி ஆனந்த் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால், எனக்குத் தெரிந்த தரவுப்படி, அவர் விஜயுடன் தான் இருந்தார் எனவும் சொல்கின்றனர்.மேலும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியாக விஜய் சந்தித்து பேசியுள்ளார். அவர்களை சந்திக்கும் போது, அவருடன் யாரும் இல்லை, தனியாகவே அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, அழுதும் புலம்பியும் இருக்கிறார். இவர் நடிகர் என்பதால் இது நடிப்பு என்ற விமர்சனக் கருத்தும் எழுந்துள்ளது. 41 பேர் உயிரிழந்தது பற்றி கேட்கும்போது நமக்கே மனம் பதறுகிறது; “நம்மால் அவர்களின் உயிர் போய்விட்டது” என்று நினைக்கும் போது, விஜய் மிகவும் வருந்தியிருப்பார்.நடிகராக இருப்பதால் உண்மையான கண்ணீரை சிந்தும் போது அது நடிப்பாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால், அவரது நிலை உண்மையில் என்ன என்பதை 41 குடும்பங்களும் மட்டும்தான் உணர முடியும். அது உண்மையான கண்ணீரா இல்லையா? என்று. கரூரில் 41 பேர் உயிரிழந்தாலும், ஒரே குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்ததால், 38 குடும்பங்கள் சம்பந்தப்பட்டவை. ஆனால் 37 குடும்பங்கள் மட்டும் அந்த நிகழ்விற்கு வந்திருந்தனர். உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி, விஜய் வழங்கிய 20 லட்சம் ரூபாயை திருப்பி அனுப்பியிருக்கிறார். விஜய் நேரில் வராததால் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார். எனினும், கரூரில் மக்களை சந்திப்பதற்கு மண்டபம் கிடைக்கவில்லை என்பதால், விஜய் சென்னையில் அவர்களை வரவழைத்து சந்தித்ததாக கூறப்படுகிறது என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version