இலங்கை

தம்பதி செய்த மோசமான செயல்; பொறிவைத்துப் பிடித்த பொலிஸார்

Published

on

தம்பதி செய்த மோசமான செயல்; பொறிவைத்துப் பிடித்த பொலிஸார்

  மொனராகலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி ஒன்று வெல்லவாய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெல்லவாய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களான தம்பதி மொனராகலை – வெல்லவாய பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

கைதுசெய்யப்பட்ட தம்பதி கொழும்பிலிருந்து வெல்லவாய பிரதேசத்திற்கு ஐஸ் போதைப்பொருளை கொண்டு வந்து விற்பனை செய்து வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தம்பதியை தவிர மேலும் 5 பேர் 23 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு, கடுவலை, ஹோகந்தர, வெல்லவாய மற்றும் எத்திலிவெவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

Advertisement

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version