இலங்கை

தாயா இல்லை பேயா ; தென்னிலங்கையை அதிர வைத்த சம்பவம்

Published

on

தாயா இல்லை பேயா ; தென்னிலங்கையை அதிர வைத்த சம்பவம்

   படபொல, கஹடபிட்டிய பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் உயிர்மாய்ப்பு செய்துகொண்டுள்ள சம்பவமொன்று தென்னிலங்கையை அதிர வைத்துள்ளது.

படபொல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பெண் மற்றும் சிறுவனின் உடல்கள் அவர்களது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

உயிரிழந்த சிறுவனுக்கு மூன்றரை வயது என்றும் தாயாருக்கு 24 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை படபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version