இலங்கை

திருமண விளம்பரத்தில் ஏமாற்றம் ; 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியினர்

Published

on

திருமண விளம்பரத்தில் ஏமாற்றம் ; 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியினர்

மணமகன் தேடுவதாக போலியான விளம்பரத்தை வெளியிட்டு, பொதுமகன் ஒருவரிடமிருந்து ரூ.300,000 நிதிமோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் இன்று (28) நீதிமன்றில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

குறித்த இருவரும் இன்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன்படி நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்த புறக்கோட்டை காவல்துறை, சந்தேக நபர்கள் தங்கள் மகளுக்குப் பொருத்தமான துணையைத் தேடுவதாகக் கூறி, ஒரு செய்தித்தாளில் மோசடியான முறையில் போலியான விளம்பரத்தை வெளியிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த விளம்பரத்தில், சந்தேகநபரின் மனைவியின் தொலைபேசி இலக்கம் மற்றும் தனிப்பட்ட விபரங்களும் சேர்க்கப்பட்டிருந்தன.

இதில், அவரது மனைவி விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட மணமகள் போலப் போலியாக அடையாளம் காட்டப்பட்டிருந்தார் என்றும் காவல்துறை மேலும் தெரிவித்தது.

Advertisement

விளம்பரத்தைப் பார்த்த பொதுமகன் ஒருவர், கொடுக்கப்பட்ட இலக்கத்தைத் தொடர்பு கொண்டு சந்தேகநபரான பெண்ணுடன் உறவை வளர்த்துக் கொண்டார்.

அதன் பின்னர், குறித்த பெண் சுமார் 3 இலட்சம் ரூபாவைப் பெற்றுக் கொண்டதுடன், பின்னர் அவருடனான தொடர்புகளைத் தவிர்த்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட நபர், காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளார்.

Advertisement

பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், மோசடி செய்யப்பட்ட பணத்தைத் திரும்பச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, நீதவான் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கியதுடன், தண்டனை வழங்குவதற்காக ஜனவரி முதலாம் திகதி மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version