இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் விவாதிக்க காவல்துறை தலைவருக்கு அழைப்பு!

Published

on

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் விவாதிக்க காவல்துறை தலைவருக்கு அழைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான பல விஷயங்கள் குறித்து விவாதிக்க, காவல்துறைத் தலைவர் பிரியந்த வீரசூரியவை நாடாளுமன்றத்திற்கு வரவழைக்குமாறு எதிர்க்கட்சி சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சியின் தலைமை கொறடாவும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க, காவல்துறைத் தலைவருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். 

Advertisement

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “அவரை நாடாளுமன்றத்திற்கு அழைக்குமாறு நாங்கள் கோரினோம். 

அத்தகைய விவாதம் அவசியம் என்று ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமல்ல, முழு எதிர்க்கட்சியும் நம்புகிறது.” கூட்டத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை சபாநாயகர் அலுவலகம் விரைவில் செய்யும் என்று எதிர்பார்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

இந்த அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்த வழக்கமான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறினார். 

Advertisement

இதனைத் தொடர்ந்து இந்த விவாதத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version