பொழுதுபோக்கு
நான் பிறந்தேன், எங்க அப்பா கைது ஆகிட்டார்; அநாதையாக வந்த சிவாஜி வாழ்க்கை அனுபவம்!
நான் பிறந்தேன், எங்க அப்பா கைது ஆகிட்டார்; அநாதையாக வந்த சிவாஜி வாழ்க்கை அனுபவம்!
சிவாஜி கணேசன், தமிழ் சினிமாவின் நடிப்புத் திலகம் என்று போற்றப்படும் மிகச் சிறந்த நடிகர். இவர் தலைமுறையையும் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு கலைஞர். நாடக மேடையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர். நடிகர் சிவாஜி கடந்த 1952-ஆம் ஆண்டு வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அவர் பேசிய வசனங்கள், உடல் மொழி, மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு ஆகியவை தமிழ் சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது. ’வீர பாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் சிவாஜியின் நடிப்பு சிலிர்ப்பை ஏற்படுத்தும். தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் சிவாஜி நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த பெருமை கொண்டவர் சிவாஜி.சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் சிவாஜி கணேசன் தான். 90 காலக்கட்டத்தில் சினிமாவில் நடிக்க வரும் பெரும்பாலானோர் ‘பராசக்தி’ படத்தில் சிவாஜி பேசிய வசனத்தை தான் மனப்பாடம் செய்து வருவார்கள். கலைஞர் கருணாநிதி எழுதிய ’பராசக்தி’ படத்தின் வசனங்கள் இன்று வரை எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது. நடிகர் சிவாஜி, ரஜினி, விஜய் உள்ளிட்ட நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் சிவாஜி தனது வாழ்க்கை அனுபவம் குறித்து நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “நான் பிறந்த அன்று என் தந்தையை கைது செய்துவிட்டார்கள். காரணம் எங்க அப்பார் ஒரு பெரிய தேசியவாதி. நான் சிறு வயதாக இருக்கும் பொழுது எங்கள் வீட்டு முன்பு கட்டபொம்மன் நாடகம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு நாமும் ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆசை மட்டுமல்ல வறுமை, சாப்பிட வேண்டும் என்றும் இருந்தது. எங்க அப்பா ஜெயிலுக்கு சென்றதால் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். அதனால், என் அப்பா, அம்மாவிற்கு தெரியாமல் ஓடிப்போய் எனக்கு அப்பா, அம்மாவே இல்லை. நான் ஒரு அனாதை என்று சொல்லி நாடக கம்பெனியில் சேர்ந்துவிட்டேன். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நாடகத்தில் ஒரு நடிகனானேன்.” என்றார்.