இலங்கை
பெரிய வெங்காய கொள்வனவு திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள்; விவசாயிகள் கடும் நெருக்கடி
பெரிய வெங்காய கொள்வனவு திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள்; விவசாயிகள் கடும் நெருக்கடி
அரசாங்கத்தின் பெரிய வெங்காய கொள்வனவு திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
17 நிபந்தனைகளின் கீழ் நடைபெறும் இந்தக் கொள்வனவில், வெங்காயத்தின் அளவு, எடை மற்றும் தரம் தொடர்பான விதிகள் விவசாயிகளை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் கொள்வனவு நிபந்தனைகளின்படி, பெரிய வெங்காயத்தின் விட்டம் 35 இலிருந்து 65 மில்லி மீட்டருக்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கு அப்பாற்பட்ட 65 மில்லி மீற்றருக்கு மேல் பெரிய அல்லது 35 மில்லி மீட்டருக்கு குறைவான சிறிய வெங்காயங்கள் மொத்தத் தொகையின் 10 சதவீதத்தை தாண்டிவிடக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோ வெங்காயத்தில் 8 காய்களுக்கு மேல் இருக்கக்கூடாது எனவும் தர நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதுடன் இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு ரூ.140 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒரு விவசாயிகளிடம் இருந்து அதிகபட்சம் 2,000 கிலோ வரை கொள்வனவு செய்யப்படுகிறது. இந்த நிபந்தனைகள் தங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாக மாத்தளை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றன நிலையில், தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் நிறுவப்பட்டுள்ள வெங்காயக் கொள்வனவு நிலையத்திற்கு எந்தவொரு விவசாயியும் வெங்காயத்தை விற்பனை செய்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.