இலங்கை
போதைப்பொருள்கள் தொடர்பில் 62 லட்சம் பேரிடம் விசேட சோதனை!
போதைப்பொருள்கள் தொடர்பில் 62 லட்சம் பேரிடம் விசேட சோதனை!
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் தற்போது வரை அண்ணளவாக 62 லட்சம் பேரிடம் போதைப்பொருள் தொடர்பான விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எவ்.யு.வூட்லர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
போதைப்பொருள் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மற்றும் விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் தற்போது வரை 62 லட்சத்துக்கு மேற்பட்டோர் போதைப்பொருள் தொடர்பில் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது 5 ஆயிரத்து 467 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில், 57 ஆயிரத்துக்கு மேற்பட்ட பிடியாணைகள் தொடர்பிலும், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திறந்த பிடியாணைகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், சந்தேகநபர்கள் சட்டவிரோதமாகக் குவித்து வைத்துள்ள சொத்துக்கள் தொடர்பிலும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன -என்றார்.