இலங்கை
மலேரியா நோய்த்தொற்று மீண்டும் பரவும் அபாயம்!
மலேரியா நோய்த்தொற்று மீண்டும் பரவும் அபாயம்!
இலங்கையில் மலேரியா நோய்த்தொற்று மீண்டும் பரவக்கூடும் என்ற அச்சத்தைச் சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளிடையே மலேரியா நோய்த்தொற்று அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதெவேளை, இந்த ஆண்டில் இதுவரை 27 பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளிலிருந்தபோது தொற்றுக்குள்ளான இலங்கையர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இதனைக் கருத்திற்கொண்டு வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் அனைவரையும் மலேரியா பரிசோதனைக்குட்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.