இலங்கை

மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு; முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்து!!

Published

on

மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு; முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்து!!

மாகாண சபைகளுக்கு அதிகாரப்பகிர்வு அவசியம். அந்தச் சபைகளை மக்கள் பிரதிநிதிகளே முழுமையாக ஆள வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின் கோரிக்கையாகும். பல வருடங்களாக இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. எனவே, அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சிந்திக்காமல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

Advertisement

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்குரிய முக்கிய பொறுப்பு இந்த அரசாங்கத்துக்கு உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது. அதேவேளை, மாகாணசபைகளை ஆளுநர்கள் ஊடாக ஆள்வது ஜனநாயகம் அல்ல. எனவே, தமது பிரச்சினைகளை தமது பிரதிநிதிகள் ஊடாக தீர்த்துக்கொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். மாகாணசபைகளுக்கு அதிகாரப்பகிர்வு அவசியம். எனவே, தேர்தல் நடத்தப்பட வேண்டும் -என்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version