பொழுதுபோக்கு
மெகாஹிட் படத்தில் கமலுக்கு மகள்; சினிமாவை விட்டு விலகிய இந்த நடிகை பல ஹிட்கள் கொடுத்தவர்!
மெகாஹிட் படத்தில் கமலுக்கு மகள்; சினிமாவை விட்டு விலகிய இந்த நடிகை பல ஹிட்கள் கொடுத்தவர்!
பொதுவாக சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு மகளாகவோ அல்லது அவர்களின் படங்களில் முக்கிய கேரக்டரிலே நடித்த நடிகைகள் பின்னாளில் சினிமாவில் இருந்து விலகினாலும், அவர்களை பற்றி செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருவது வழக்கம். அந்த வகையில் மெகாஹிட் படத்தில் கமல்ஹாசனுக்கு மகள் கேரக்டரில் நடித்த நடிகை ஒருவர் தற்போது அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.அந்த நடிகை வேறு யாரும் இல்லை. நடிகை கார்த்திகா தான். மணி ரத்னம் இயக்கத்தில் 1987-ஆம் ஆண்டு வெளியான க்ளாசிக் திரைப்படம் ‘நாயகன்’. இந்த படம் வெளியான காலக்கட்டம் முதல் தற்போது வரை தமிழ் சினிமாவில் அடையாளங்களில் ஒன்றாக, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் தொடர்ந்து பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதன் சக்திவாய்ந்த கதை மற்றும் கமல்ஹாசனின் அபாரமான நடிப்பு ஆகியன இப்படத்தை காலத்தால் அழியாததாக்கியுள்ளன.’நாயகன்’ திரைப்படம், மும்பையின் பிரபலமான நிழல் உலகத் தாதா வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையைத் தழுவி, சற்று கற்பனைக் கலப்புடன் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இப்படத்தில், கமல்ஹாசன் தாராவி பகுதியில் வாழும் வேலு என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அவர் அப்பகுதி மக்களின் தனிப்பட்ட பிரச்சனைகளான விவாகரத்து போன்ற பல விஷயங்களில் தலையிட்டு அவர்களுக்கு உதவுகிறார். இருப்பினும், அவர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அரசின் கண்காணிப்புக்கு உள்ளாகிறார்.இப்படத்தில், கமல்ஹாசனின் மகளான சாருமதி கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை கார்த்திகா. இந்த படத்தில் அவர் கமல்ஹாசனை கேள்வி கேட்பதும், அதற்கு அவர் அடிப்பதும், இதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறி நாசரை திருமணம் செய்துகொள்வதும் தான் கதை. இந்த படம் பெரிய வெற்றி பெற்றாலும் இதன்பிறகு கார்த்திகா தமிழில் நடிக்கவில்லை. மாறாக பூவிழி வாசலிலே என்ற தமிழ் படத்தில் நாயகன் படத்திற்கு முன்னதாக நடித்திருந்தார். அதே சமயம் கார்த்திகா ஒரு பிரபலமான மலையாள நடிகை. 1979 முதல் 1991 வரை மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். மோகன்லாலுடன் காந்தி நகர் செகண்ட் ஸ்ட்ரீட், தலவட்டம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். 1988-ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்ட கார்த்திகா, அதன்பிறகு, சில திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில், கமல்ஹாசன் இணை-எழுதி நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படமான ‘தக் லைஃப்’ வெளியானதைத் தொடர்ந்து, ‘நாயகன்’ பற்றிய பேச்சுக்கள் மீண்டும் சூடுபிடித்தது. அப்போது பலரும் இந்த படத்தை பார்த்த நிலையில், நடிகை கார்த்திகா தற்போது எப்படி இருக்கிறார் என்ற கேள்வியும் எழுந்துது குறிப்பிடத்தக்கது.