இலங்கை

யாழில் சட்டவிரோதமாக மணலுடன் இரு உளவு இயந்திரங்களை கைப்பற்றிய பொலிஸார்! ஒருவரும் கைது

Published

on

யாழில் சட்டவிரோதமாக மணலுடன் இரு உளவு இயந்திரங்களை கைப்பற்றிய பொலிஸார்! ஒருவரும் கைது

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த இரண்டு உழவு இயந்திரங்களை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

 இந்த சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ் .பி. திஸ்ஸாநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று அதிகாலை குறித்த பகுதிகளில் விசேட சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

 இதன்போதே சட்டவிரோத மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்களைக் கைப்பற்றியுள்ளதுடன் ஒருவரைக் கைது செய்துள்ளனர். அதேவேளை சிலர் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version