இந்தியா

ரஃபேல் போர் விமானத்தில் முதல் முறையாக பயணித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

Published

on

ரஃபேல் போர் விமானத்தில் முதல் முறையாக பயணித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை அன்று, ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப் படைத் தளத்தில் ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.விமானம் காலை 11.27 மணிக்கு கிளம்புவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு, குடியரசுத் தலைவர் முர்மு ஒரு ஹெல்மெட்டை கையில் பிடித்தவாறு, சன்கிளாஸ் அணிந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவர் தனது பயணத்தைத் தொடங்குவதற்குச் சற்று முன்னர் விமானத்தின் உள்ளிருந்து கையசைத்தார்.#WATCH | Haryana: President Droupadi Murmu takes off in a Rafale aircraft from the Ambala Air Force Station pic.twitter.com/XP0gy8cYRHஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தபோது, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இலக்குத் தாக்குதலில் ரஃபேல் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. எனினும், இது குடியரசுத் தலைவர் முர்முவின் போர் விமானப் பயணங்களில் முதன்முறை அல்ல. இதற்கு முன்னர், 2023-ம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி, அவர் அஸ்ஸாமில் உள்ள தேஜ்பூர் விமானப்படைத் தளத்தில் சுகோய்-30 MKI போர் விமானத்தில் பயணம் செய்தார். இதன் மூலம், போர் விமானத்தில் பயணம் செய்த 3-வது குடியரசுத் தலைவர் மற்றும் 2-வது பெண் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.VIDEO | President Droupadi Murmu inspects guard of honour at Ambala air base. The President will take a sortie in Rafale fighter jet from Ambala Air Force base today.(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/CAlCgmka7zமுன்னாள் குடியரசுத் தலைவர்களான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோர் முறையே 2006 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி மற்றும் 2009-ம் ஆண்டு நவ.25-ம் தேதி லோஹேகான் விமானப் படைத் தளத்தில் சுகோய்-30 MKI போர் விமானங்களில் பயணம் செய்துள்ளனர்.பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டஸ்ஸால்ட் ஏவியேஷன் (Dassault Aviation) தயாரித்த ரஃபேல் போர் விமானங்கள், 2020 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி பிரான்சிலிருந்து வந்தன. அவை அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அம்பாலா விமானப் படைத் தளத்தில் இந்திய விமானப் படையில் முறையாகச் சேர்க்கப்பட்டன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version